பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று இன்று இலண்டனில் நடைபெறுகின்றது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனின் உத்தியோகபூர்வ வாசல்தலமான 10 டவ்னிங்க் வீதிக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரதமரின் நிலைப்பாடில் மேலும் அழுத்தத்தினை கொடுப்பதற்காக இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.