சேகர் தம்பிராஜாவின் ‘கறுத்தான்” மின் நூலாக வெளிவந்துள்ளது | புலம்பெயர் தமிழரின் நூலாக்கத்தில் புதிய பரிணாமத்துடன் கனடா “தாய்வீடு” பத்திரிகை சேகர் தம்பிராஜாவின் ‘கறுத்தான்” மின் நூலாக வெளிவந்துள்ளது | புலம்பெயர் தமிழரின் நூலாக்கத்தில் புதிய பரிணாமத்துடன் கனடா “தாய்வீடு” பத்திரிகை

s2

 

ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்படும் படைப்புக்கள் நூலுருப்பெறுவதில் கடந்த பல தசாப்பதங்களாக காணப்பட்ட மந்த நிலையினை தளர்த்தி அண்மைக்காலங்களில் நம்பிக்கை துளிர் விட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இன்று ஈழத்தமிழர்களிடையே புத்தகப்பண்பாடு செழுமை அடையத்தொடங்கிய இக்கால கட்டத்தில், சேகர் தம்பிராஜா கனடா தாய்வீடு பத்திரிகையில் எழுதிய நினைவுக் கட்டுரைகளை தொகுத்து ‘கறுத்தான்” என்னும் மின் நூலாக தாய்வீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் விரும்பிய நேரத்தில் இன் நூலை தரவிறக்கம் செய்து வாசிக்கமுடியும். இவ் மின் நூல் முறைமையூடாக அதிகளவான வாசகர்களை இலகுவாக சென்றடைய முடிகின்றது.

யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்விகற்ற சேகர் தம்பிராஜா இரண்டாயிரம் ஆண்டுகளின் முற்பகுதியில் கனடாவில் குடியேறியுள்ளார். நாடகத்துறை கவிதை என்பவற்றுள் ஈடுபாடுகொண்ட இவர் தனது பழைய நினைவுகளையும் தாயகத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறைமையையும் சுவைபட ஒரு நகைச்சுவை ஓட்டத்துடன் கட்டுரைகளாக கனடா தாய்வீடு பத்திரிகையில் எழுதி வந்துள்ளார். 

 

“கறுத்தான்” மின் நூல் வெளியீடு தொடர்பாக “தாய்வீடு” பத்திரிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்;

 

தாய்வீடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு தாய்வீடு எழுத்தாளர் சந்திப்பில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட, சேகர் தம்பிராஜாவின் ‘கறுத்தான்’ நூல் இப்போது கூகிள் புத்தகச் சந்தையில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த நூலை கணினிகளில் உள்ள இணைய உலாவிகளிலும் (Web Browser), iSO அல்லது Android இயங்கு தளங்களில் இயங்கும் நுண்ணறி பேசிகளிலும் (Smart Phone), பட்டிகைக் கணினிகளிலும் (Tablet Computers) சிறப்பு மென்பொருள் மூலமாகவும் வாசிக்கலாம். ePub Format இல் அமைக்கப்பட்ட இந்த வகை மின்நூல்கள் குறிப்பாகப் பட்டிகைக் கணினிகளில் வாசிப்பதற்கு மிகவும் ஏற்றவை. நீங்கள் ஓர் iSO பாவனையாளராக இருப்பின் உங்கள் App Store இல் Google Play Books என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்து அதன் தேடல் பொறியில் ‘கறுத்தான்’ அல்லது ‘Karuthaan’ என்று தேடுவதன் மூலம் இந்தநூலை வாசிக்கலாம்.

நீங்கள் Android பாவனையராக இருப்பின் Google Play Store இல் ‘கறுத்தான்’ அல்லது ‘Karuthaan’ என்று தேடுவதன் மூலம் இந்த நூலை வாசிக்கலாம். உங்களிடம் Google Play Books மென்பொருள் இல்லாவிடில் அதைத் தரவிறக்கம் செய்யவேண்டியிருக்கலாம்.

உங்கள் கணினியிலுள்ள இணைய உலாவியில் play.google.com என்ற இணையத் தளத்துக்குச் சென்றும் வாசிக்கலாம்.

கூகிள் புத்தகச் சந்தையில் 5 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் கிடைக்கின்றன. லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா (ஆங்கிலத்தில்) முதல் கல்கியின் அமர வாழ்வு வரை ஏராளமான புத்தகங்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன. நீங்கள் இந்த நூலை வாசித்து உங்கள் அபிப்பிராயங்களைப் பதிவு செய்வது எமது பதிப்பக வளர்ச்சிக்கு மிக்க உறுதுணையாக இருக்கும்.

 

எனத் தெரிவித்துள்ளது. இவ் மின் நூல் திட்டத்தின் பயன்பாடானது ஈழத்தமிழரின் படைப்புக்கள் அகலக்கைகளை விரித்து பறக்க உதவட்டும்.

ஆசிரியர்