ஜனாதிபதி மஹிந்த மியன்மாரில் மன்மோகனுடன் பேச்சு!ஜனாதிபதி மஹிந்த மியன்மாரில் மன்மோகனுடன் பேச்சு!

மியன்மாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார்.
மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகிய வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த போதே இந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்