இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது. ஜெனீவா நேரப்படி முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு எதிரான அமரிக்காவின் யோசனை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை அல்லது நாளை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில் 25 வது அமர்வில் அமரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள யோசனையின் புதிய திருத்தத்தின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு வருட கால சர்வதேச விசாரணை காலம் நிர்ணயிக்கப்பபட்டுள்ளது.
இதற்கமைய ஒரு வருட காலப்பகுதிக்குள் விசாரணை அறிக்கை மனித உரிமை பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று யோசனையில் குறிப்பிட்டுள்ளது.