நாடு அமர்க்களத்தில் இருக்கும் போது மலேசிய ராணிக்கு மட்டும் ஆனந்தம். நாடு அமர்க்களத்தில் இருக்கும் போது மலேசிய ராணிக்கு மட்டும் ஆனந்தம்.

article-2589971-1C921BE500000578-943_634x425மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்து நொறுங்கி அதில் பயணம் செய்த 239 பயணிகளும் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மலேசிய மக்கள் இன்னும் மீளவில்லை. இந்த விபத்தில் மலேசியாவை சேர்ந்த 39 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் பெரும் சோகத்தில் திகழ்கிறது. எங்கு பார்த்தாலும், பயணிகளின் உறவினர்களின் கதறல் சத்தமும், கண்ணீரும் தெரிவதாக மலேசிய பத்திரிகை செய்திகள் வெளியிட்டு வருகின்றன

ஆனால் இந்த நிலையில் மலேசிய ராணி கோல்ப் மைதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோல்ப் விளையாடி வருவதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் பெரும் முயற்சி செய்து இந்திய பெருங்கடலில் மிதக்கும் விமானத்தின் துண்டுகளை மீட்க முயற்சி செய்து வரும் இந்த நேரத்தில் மலேசிய ராணி வுரயமெர ர்யதயா ர்யஅiயொ கோலாலம்பூரில் உள்ள கோல்ப் மைதானத்தில் மிகுந்த உற்சாகத்துடன் சிரித்துக்கொண்டே கோல்ப் விளையாடி வருகிறார்.

ரோம் நகரம் தீப்பிடித்து எரியும்போது அதன் மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. மக்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டிய ராணி, இவ்வாறு பொறுப்பில்லாமல் இருப்பது குறித்து மலேசிய ஊடகங்கள் கண்டித்துள்ளன.

ஆசிரியர்