அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அத்துடன் அரசாங்கம் வடமாகாண முதலமைச்சருடன் கலந்தாலோசித்து எந்த விடயத்தையும் செய்யவில்லை என்றும் தேசிய மொழிகள் மற்றும் இன நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
சமாஜவாத மக்கள் முன்னணி என்ற ரீதியில் தாம் வேண்டுகோள் ஒன்றை ஏற்கனவே முன்வைத்துள்ளோம். இந்த நாட்டின் இன ஐக்கியத்தை ஏற்படுத்த தாம் உருவாக்கிய உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த வேண்டுமென்றும் கேட்டுள்ளோம். வடக்கு மாகாண சபையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படும்படியும் மனித உரிமைகள் செயற்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் படியும் தாம் அரசைக் கேட்டுள்ளோம் இவ்வாறு தெரிவித்தார்.