அமெரிக்க வெள்ளைமாளிகை விருது பெற்ற ஈழத்தமிழரான விஞ்ஞானி சிவா சிவானந்தன் லண்டனில் அமெரிக்க வெள்ளைமாளிகை விருது பெற்ற ஈழத்தமிழரான விஞ்ஞானி சிவா சிவானந்தன் லண்டனில்

நேர்காணல் | விஞ்ஞானி பேராசிரியர் சிவா சிவானந்தன் | சுப்ரம் சுரேஷ்  

 

அமெரிக்காவில் University of Illinois at Chicago என்னும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் சிவா சிவானந்தன் இன்று உலகம் அறிந்த ஒரு விஞ்ஞானி. ஒரு ஈழத்தமிழர் அமெரிக்காவில் முக்கியமான ஒரு விஞ்ஞானியாக இருப்பது பெருமைகொள்ள வேண்டிய விடையம். இன்று அமெரிக்க படைத்துறைக்கு இரவு பார்வை (Night Vision Technology ) தொழில்நுட்பத்தில் இவரது கண்டுபிடிப்புக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சாவகச்சேரி மட்டுவில் பிரதேசத்தில் பிறந்த இவர் சாவகச்சேரி சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும் டிர்பெக் கல்லூரியிலும் பின்னர் யாழ் இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டமும் நிறைவு செய்து, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றினார். மேற்படிப்புக்காக அமேரிக்கா சென்ற இவர் இன்று ஒரு பிரபல விஞ்ஞானி.

DG12_09_27_220.jpg

2013 ம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையின் மதிப்புக்குரிய விருதான  “Champion of Change” இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க அரசின் சிறப்பு குடியுரிமையும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

1998 ம் ஆண்டு முதல் சிவானந்தன் ஆய்வுகூடம் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார். அத்துடன் இவரது EPIR Technolgies நிறுவனம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கு சில சேவைகளை வழங்கி வருகின்றது.

இன்று சாவகச்சேரி இந்துக்கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்த கலாசார நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார்.

 

கே: வணக்கம் பேராசிரியர் சிவானந்தன், ஒரு ஈழத்தமிழரான நீங்கள் இன்று அமெரிக்காவில் முக்கியமான விஞ்ஞானியாக இருக்கின்றீர்கள் என்ற பெருமையுடன் சந்திக்கின்றோம். குறிப்பாக ஈழத்தமிழர்கள் இதுவரை  விஞ்ஞானிகளாக இருந்தது மிகக் குறைவு, எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது?

என்னுடைய இந்த நிலைக்கு காரணம் எனக்கு இடப்பட்ட அத்திவாரம் என நினைக்கின்றேன். உன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வழங்கிய எனது கிராமம். சிவலிங்கம் மாஸ்டரின் மகனால் முடியும் என்ற உறுதியை தந்த எனது சமூகம் மற்றும் எனது தந்தை. நான் சிறு வயதாக இருந்த காலத்தில் சாவகச்சேரி வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினார். அவர் எனது சிறு வயதிலே கூட்டு முயற்சி ( Team Work ) பற்றி மனதில் பதிய வைத்தார். கூடவே இருந்து எனது படிப்பினை கண்காணித்த எனது அம்மா, குறிக்கோளை அடைவதற்கான வேகத்தைத் தந்தவர்.

எப்போதும் எனது குழுவில் என்னைவிட அறிவு கூடியவர்களை இணைத்துக்கொள்ள முயற்சி செய்வேன். ஏனெனில் அதுவே எம்மை வளர்த்துக்கொள்ளவும் சாதித்துக்கொள்ளவும் வழிவகுக்கும்.

அத்துடன் எனது அப்பா எமது விருப்பத்துக்கு ஏற்ப படிக்க விட்டு ஊக்கம் தருபவர். பௌதிகவியல் எனது விருப்பப்பாடம் அதனையே நான் தொடந்து படித்ததால் என்னால் இந்த நிலைக்கு வர முடிந்தது. அதற்கு அப்பாக்கு நன்றி சொல்ல வேண்டும்.

3532882_orig

 

கே: அமெரிக்க அரச உயர்மையம் உங்களுக்கு “Champion of Change” என்ற விருதை 2013 ம் ஆண்டு வழங்கி கௌரவித்தது. இச்செய்தி வெளிவந்ததும் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் பெருமை கொண்டனர். குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

ஏற்கனவே எனக்கு வேறு விஞ்ஞான விருதுகள் கிடைத்துள்ளன, எனவே இந்த விருது அறிவிக்கப்பட்டவுடன் பெரிதாக எந்த விதமான மாற்றமும் வெள்ளை மாளிகை செல்லும் வரை ஏற்படவில்லை. உதாரணமாக மலையில் ஒரு வேகத்துடன் ஏறும்போது நாம் திரும்பி பார்க்கமாட்டோம் ஒரு நிலையில் தரித்து திரும்பிப்பார்க்கும் போதுதான் நாம் கடந்த தூரம் தெரியும் அதே உணர்வு விருது வழங்கும் போது நான் வெள்ளை மாளிகையில் உரை ஆற்றும்போது தெரிந்தது.

அப்போது சந்தோசமாக இருந்தது.

சரஸ்வதி   மகாவித்தியாலயத்தில் தொடங்கிய எனது கல்வி இன்று வெள்ளை மாளிகையில் நிக்க வைத்திருக்கின்றது, பின்னர், சமுகம் எனக்கு அங்கீகாரம் வழங்குவதை உணர்ந்தேன். இந்த சாதனையும் புகழும் எனது குழுவுக்குத்தான் சாரும் ஆக அந்த குழுவை உருவாக்கிய பெருமை மட்டுமே எனக்கு சொந்தம்.

 

கே: உங்களுடைய கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகள் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? 

முக்கியமாக சொல்வதென்றால் பகலில் கண்களால் பார்க்க முடிகின்றது. சூரிய ஒளியில் பார்க்க முடிகின்றது. இரவில் சந்திரனில் இருந்து தெறித்துவரும் ஒளிமூலம் பார்க்க முடிகின்றது. இவ்வாறான வெளிச்சம் இன்றி பார்ப்பதற்கு Infra Red வெளிச்சம் மூலம் பார்ப்பதற்கான Technology ஐ மிகவும் நுட்பமான முறையில் வினைத்திறன் கூடிய முறையில் கண்டுபிடித்தேன். இந்த தொழில் நுட்பம் மனித உடம்பில் இருந்து வெளிவரும் ஒளியை உணரக்கூடியது, சிறு பூச்சிகளில் இருந்து வெளிவரும் ஒளியையும் உணரக்கூடியது. இதன்மூலம் கடும் இருளிலும் பார்க்க முடியும், தூசு நிறைந்த இடத்திலும் நெருப்பு சுவாலையையும் ஊடறுத்து பார்க்க முடியும்.

மருத்துவத்துறையில் கண்ணுக்கு புலப்படாத நோய்க்களை உருவாக்கும் கிருமிகளை பார்க்கமுடியும்.

IMG_8079

 

கே: ஒசாமா பின்லேடன் மீது அமெரிக்கா நடாத்திய சீல் நடவடிக்கைக்கு தங்களது கண்டுபிடிப்பான இரவு பார்வை கண்ணாடிகளை பயன்படுத்தியமை பற்றி சற்று விரிவாகச் சொல்ல முடியுமா? 

அந்த ஆபரேஷன் க்கு பாவிக்கப்பட நைட் விஷன் Camera இந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை.

 

கே: யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்ச்சிப் பட்டறை பற்றி சொல்ல முடியுமா?

சூரிய சக்தி மூலம் மேற்கொள்ளப்படும் சோலார் மின் உற்பத்திக்கு வேண்டிய தொழில்நுட்பத்தை யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பயிற்ச்சிகளை வழங்குவது. இதன்மூலம் சோலார் கலங்களை உள்ளூரில் உற்பத்தி செய்தால் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் இதனூடாக பொருளாத வளர்ச்சியை ஏற்படுத்துதல்.

IMG_8073

 

கே: உங்களுடைய பிரேத்தியகமான குறிக்கோள் என கருதுவது? 

தற்போது இரண்டு, ஓன்று நைட் விஷன் டெக்னாலஜி , அது நிறைவு பெற்றுள்ளது மற்றது சோலார் கலங்களை அதிக அளவில் பாவிக்க வைப்பதற்கான பொறிமுறையை உருவாக்கும் கண்டுபிடிப்புக்கள். இதன்மூலம் சிறு கைத்தொழில் வளரும் ஏனெனில் அதிக அளவான பாவனை மூலம் திருத்தும் நிலையங்கள் கூட தோன்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும் உற்பத்தித் திறனும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும். நம்பிக்கை இருக்கின்றது விரைவில் சாதிப்போம்.

 

கே: நீங்கள் பிறந்து வளர்ந்த இடம் சாவகச்சேரியில் உள்ள மட்டுவில் பற்றியும் நீங்கள் கல்வி கற்ற ஆரம்ப பாடசாலைகள் பற்றியும் உங்கள் மனசுக்குள் அசைபோடும் நினைவுகள் ஏதாவது இருக்கின்றதா?

நான் முதல் சொன்னமாதிரி எனக்குள் இடப்பட்ட சிறந்த அத்திவாரம் எனது ஊரிலும் படித்த பாடசாலைகளிலும் இடப்பட்டன. எனது ஆசரியர்கள் தமது பிள்ளை போன்று கல்வி ஊட்டினர். சாவகச்சேரி பிரதேசம் சிறுவயதில் எனக்கு தன்னம்பிக்கையை தந்தது. நேர்மறையான அனுபவத்தை சிறுவயதில் தந்ததை இப்பவும் நினைத்துப்பார்ப்பதுண்டு.

இப்போது உள்ள பிள்ளைகள் நாம் இருந்ததைவிட மிகவும் பலமான நிலையில் அவர்களது சிந்தனைகளை கொண்டுள்ளார்கள். அதனை அவர்கள் என்னைவிட பெரியளவில் சாதிப்பார்கள்.

siva-large

ஒரு சின்ன விடயம் சொல்லலாம், நான் சின்ன வயசில் படிப்புத் தேவைக்கு தேங்காய் விற்று பணத்தைப் பெற்றேன் அனால் இன்று அதையே ஒரு கட்டமைக்கப்பட்ட முறையில் செய்வதற்கு இன்றைய இளம் தலைமுறைக்கு திறைமை உண்டு.

 

கே: இன்று சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பிரித்தானிய நிகழ்வில் கலந்து கொள்வது பற்றி என்ன சொல்ல நினைக்கின்றீர்கள். 

மிகவும் சந்தோசமான விடையம். நான் எனது பிரதேச பாடசாலையின் நிகழ்வில் கலந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி. இந்த நிகழ்வு சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்கள். தாம் படித்த பாடசாலை வளர இவ்வாறான நிகழ்வுகள் முக்கியமானது. ஒழுங்கு செய்யும் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.

 

இன்று உலகம் திரும்பிப் பார்க்கின்ற ஒரு விஞ்ஞானி என்ற பெருமையுடன் இருக்கின்றீர்கள் உங்களுக்கு வணக்கம் லண்டன் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

 

 

– சுப்ரம் சுரேஷ் –

 

யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்ச்சிப் பட்டறை :

il_570xN.254530831

bxf

 

ஆசிரியர்