கராச்சி விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்கராச்சி விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தான், கராச்சி விமானநிலையத்தில் நேற்று இரவு பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட மொத்தம் 23 பேர் பலியாகியுள்ளனர்.

கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை போன்ற போலியான அடையாள அட்டையை காட்டி உள்ளே சென்றுள்ளனர்.பின்னர் அங்கு துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டுகளை கொண்டும் தாக்குதலி ஈடுபட்டுள்ளனர். இதில் பாதுகாப்புபடை வீரர்கள் 5 பேர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில் இன்று காலை 9.16 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் மீண்டும் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதாகவும், சிலர் காயமுற்றதாகவும் தகவல் தெரிவிக்கிறது

ஆசிரியர்