இளம் கலைஞர்களுக்கு மதிப்பளிக்கும் விருது வழங்கும் விழா நேற்று மேற்கு லண்டனில் நடைபெற்றது. உலக தமிழ் கலைஞர்கள் சங்கம் (GTAA) மற்றும் தமிழிதழ் இணையம் இணைந்து நடாத்திய சாதனைத்தமிழா விழாவில் 2013ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 61 விருதுகள் துறைசார் ரீதியாக வழங்கப்பட்டன. சிறப்பு விருதாக கே எஸ் பாலச்சந்திரன் நினைவு விருதும் வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. அதேபோன்று சமூக விருது மூன்று பேருக்கு வழங்கப்பட்டன. அதில் பிரித்தானியாவில் இளம் விஞ்ஞானியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவரும் மற்றும் சர்வதேச போட்டிகளில் நடனக் கலைஞராக கலந்துகொண்டு பாராட்டுக்கள் பெற்ற ஒருவரும் அடங்குவர்.
குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தில் இளம்தலைமுறையினரின் சாதனைக்காக வழங்கப்படும் இவ் விருதுகளுக்கு அரங்கத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தமையும் அரங்கம் நிறைந்து பார்வையாளர்கள் ஆதரவு வழங்கியமையும் எமது இளம் தலைமுறைக்கு நிச்சயம் ஒரு ஊக்கத்தை வழங்கும் எனச்சொல்லலாம்.
ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தென்னிந்தியாவில் பல மொழி திரைப்படங்களில் நடித்து, இயக்கி, தயாரித்து சாதனைபடைத்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஜெய் ஆகாஷ் இவ் விழாவில் அதிதியாக கலந்து கொண்டார். இவ் விழாவில் விருது பெரும் கலைஞர்களுக்கு தனது ஆதரவு ஏன்றும் இருக்கும் அத்துடன் தனது அடுத்த திரைப்படத்தில் சந்தர்ப்பம் வழங்குவேன் என மேடையில் தெரிவித்தபோது. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
நம்பிக்கைகளும் விடாமுயற்சிகளும் என்றும் வெற்றியைத்தரும் என்பதற்கு சாதனைத்தமிழா சந்தர்ப்பத்தை வழங்கட்டும்.