December 7, 2023 3:41 am

சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி கொலை சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி கொலை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஈராக்கில் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். ஈராக்கில் சன்னி முஸ்லிம்கள் ஆதரவு அல் – குவைதா பயங்கரவாதிகள், சன்னி முஸ்லிம்களுடன் இணைந்து, அரசுக்கு எதிராக பயங்கர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பல முக்கிய நகரங்கள், பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்த வண்ணமாக உள்ளன. அவர்கள் தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வருகின்றனர்.

நீதிபதி கொடூரக்கொலை:
இந்நிலையில் சதாம் உசேன் உதவியாளர் இசாத் இப்ராஹிம்-அல்-நூரி என்பவர் தனது பேஸ்புக் வாயிலாக வெளியான செய்தியில், ரசாயன குண்டுகள் பயன்படுத்தியதற்கு கடந்த 2006-ம் ஆண்டு பாக்தாத் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ராவூப் அப்துல் ரஹ்மான், ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்தனர். இவ்வாறு பேஸ்புக் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட நீதிபதி ராவூப் அப்துல் ரஹ்மான், குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவர். தீர்ப்பளித்த அடுத்த ஆண்டே தனக்கும்,தனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து நேரலாம் எனவும் அடைக்கலம் தருமாறு பிரிட்டன் அரசை 2007-ம் ஆண்டு கோரிக்கைவிடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டான் எம்.பி., கலீல் அட்டியே தனது பேஸ்புக்கில் எழுதியுள்ள கருத்துக்களின் படி புரட்சியாளர்களை எல்லாம் கைது செய்த காரணத்தாலும் சதாமுக்கு மரண தண்டனை விதித்தார் அதற்கு பதிலடியாக இச்சம்பவம் இருக்கலாம் என்றார். மேலும் ராவூப் அப்துல் ரஹ்மான், நடன கோலத்தில் மாறுவேடமிட்டு பாக்தாத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்