இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் காணும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய எம்.பி எதிர்ப்பு இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் காணும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய எம்.பி எதிர்ப்பு

கடலில் இருந்து மீட்கப்பட்டு, ஆஸ்தி ரேலிய முகாமில் தங்கவைக்கப்பட் டுள்ள அகதிகளை இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் காணும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய எம்.பி. சாரா ஹான்சன் யங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இத்தகு நடவடிக்கையில் ஈடுபட இந்திய தூதரகத்துக்கு சட்டரீதியான உரிமை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 157 பேர், கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றனர். இவர்கள் ஆஸ்திரேலி யாவுக்குள் நுழைய சட்டப்பூர்வ அனுமதி இல்லை. ஆகவே, நடுக்கடலில் தத்தளித்தனர். கடந்த 7-ம் தேதி இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி கடல்வழியாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்ற னர். ஆனால், இந்த அகதிகள் இந்தியாவிலிருந்து வந்திருப்ப தால், மனுஸ் தீவு அல்லது நவ்றூ தீவுகளில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவிலிருந்து வந்த அகதிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும்பணியில், ஆஸ் திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் ஈடுபடவுள்ள னர். இதற்கு எம்.பி. சாரா ஹன்சன் யங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர்கூறும்போது, “ஆஸ்திரேலி யாவில் தஞ்சம்கோரும் இந்த அகதிகள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு எவ்வித சட்டப்பூர்வ அடிப்படைக் காரணமும் இல்லை.

இந்தியாவில் தஞ்சம் கோருபவர் கள் தொடர்பாக இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்ப தில்லை; ஐ.நா. அகதிகள் ஆணை யத்திடம் விட்டுவிடுகிறது. ஆஸ் திரேலியாவில் இந்தியா எவ்வித தலையீடும் செய்யக்கூடாது.

ஆசிரியர்