அங்கம் – 16 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை அங்கம் – 16 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

– வணக்கம்LONDON –

 

 

A1

இவ்வாறு கிளிநொச்சி நகரை விட்டு மக்கள் வெளியேறிக்கொண்டு இருந்தாலும், மக்கள் இருக்கும் இடங்களில் வைத்தியசாலைகள் இயங்கி சுகாதாரவசதிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. கிளிநொச்சி நகரில் இருந்த அரச திணைக்களங்கள் வியாபார ஸ்தாபனங்கள் தங்களுக்கு பொருத்தமானதும் பாதுகாப்பானதும் என கருதப்பட்ட இடங்ககளில் பொருட்களை நகர்த்தி சேவைகள் வழங்க எத்தனித்தனர். எமது சுகாதார திணைக்களமும் சுகாதார சேவையை பல இடர்களுக்கு மத்தியில் கிளிநொச்சிக்கு ஆப்பால் இயங்க திட்டமிட்டது, புளியம்பொக்கணை சந்தியில் அமைந்திருந்த ஆரம்ப சுகாதார நிலைய காணிக்குள் தற்காலிக அலுவலகத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

A5

அதன்படி தற்காலிக அலுவலகத்தை அமைக்க தேவையான கட்டிட பொருட்கள் அனைத்தையும் கூடிய விலைக்கு தனியாரிடம் இருந்து பெற்று கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிளிநொச்சி மற்றும் அதற்கு முன்னராக இடம்பெயர்ந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபனங்களின் கட்டிட பொருட்களை கழட்டி இன்னும் ஒருவருக்கு விற்பனை செய்தனர். சிலர் சிறு குடில்களையும் தற்காலிக தொழில் முயற்சிக்கான கட்டிடங்களையும் நிறுவினார்கள் .

A4

கிளிநொச்சி நகரை விட்டு மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஊடாகவும் பரந்தன் ஊடாகவும் தர்மபுரம், விஸ்வமடு, உடையார் காட்டுப்பகுதிகளில் குறிப்பாக பாதையின் இரு மருங்கிலும் நெருக்கமாக குடியேறினார்கள்.

புளியம்பொக்கணை பகுதியில் சுகாதார திணைக்களம் இயங்க தொடங்கியது. இடம்பெயர்ந்த நிலையிலும் பல உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளித்து இருந்தனர், அதே காணிப்பகுதியில் உத்தியோகத்தர்கள் தங்குவதற்காக தகரத்திலான கூரையை கொண்ட ஆறு சிறிய விடுதிகள் அமைக்கப்பட்டன.

A2

சுகாதார திணைக்களம் 2008 ஐப்பசி மாதம் புளியம்பொக்கணை பகுதியில் இயங்கினாலும் கிளிநொச்சி வைத்தியசாலை 2008 மார்கழி மாதம் 30ம் திகதி வரை கிளிநொச்சியில் இயங்கியது.

2008 மார்கழி மாதம் 30ம் திகதி மாலை ஏழு மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலை எஞ்சிய சில உபகரணங்கள் மற்றும் தளபாடங்களோடு வைத்தியசாலைப்பகுதியில் இருந்து முற்றாக வெளியேறி வட்டக்கச்சியின் ஊடாக தர்மபுரத்தை அடைந்தது அங்கு இயங்க தொடங்கியது. ஆனால் மேலும் சில நாட்கள் வட்டக்கச்சி மருத்துவ மனையிலும் இராமநாதபுரம் பாடசாலையிலும் இயங்கி வைத்திய சேவைகளை வழங்கியது.

போர் நடந்து மக்கள் வெளியேறிக்கொண்டு இருந்த சந்தர்ப்பங்களில் இறுதியாக அப்பகுதியில் சேவையை நிறுத்தி வெளியேறும் நிறுவனமாக தற்காலிக வைத்திய சாலைகளே இருந்தன.

 

தொடரும்……….

 

 

dr.sathy_   வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

முன்னைய அங்கங்கள்…….

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

ஆசிரியர்