எபோலா’ வைரûஸ உலகப் பேரழிவு நோய்எபோலா’ வைரûஸ உலகப் பேரழிவு நோய்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் “எபோலா’ வைரûஸ உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் இரு நாள் அவசரக் கூட்டத்தில் எபோலா வைரûஸ கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

எபோலா வைரஸ் நோயால் சுமார் 1,000 உயிரிழந்துள்ளனர். அந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் உலகளாவிய சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நோயின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் பிற நாடுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்கரெட் சான் கூறுகையில், “”கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் எபோலா வைரஸ் தொற்று நோயால் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சர்வதேச உதவிகள் தேவையாக உள்ளன” என்றார்.

முன்னதாக, “மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த நோய் பரவுவதை தவிர்க்க முடியாது.

மருத்துவ சேவை அளிக்கும் தன்னார்வ மருத்துவர்களையும் இந்த நோய் விட்டு வைக்காததால், அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கொடிய நோயின் தாக்கம் எல்லை மீறிப் போய்விட்டது’ என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்த நோய் பாதித்துள்ள லைபீரியா, கயானா, சியாரா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கயனாவில், எபோலா வைரஸ் தாக்குலால் இது வரை 932 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,700-க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எபோலா நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு கடுமையான காய்ச்சல், கட்டுக்கடங்காத ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

ஆசிரியர்