இம்ரான், காத்ரி ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் இம்ரான், காத்ரி ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன்

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் உடனடியாக பதவி விலக  வேண்டும் என்று  பாக், முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெகரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மற்றும் தெகருல் காத்ரி உள்ளிட்டோர் 48 மணி நேர கெடுவிதித்திருந்தனர்.

இந்நிலையில்  திங்கள் நள்ளிரவு கெடு முடிந்ததையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை, நோக்கி  தெகரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் தனது கட்சியினருடன் இணைந்து முற்றுகை போராட்டத்தை நடத்திவருகிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக, இம்ரான் கான் மற்றும் தெகருல் காத்ரி உள்ளிட்ட இருவரும்  வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21-ஆம் தேதி)  நேரில் ஆஜராகி விளக்கம்  அளிக்கும்படி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்