மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, லைபீரியா, சியர்ராலோன், கினியா ஆகிய நாடுகளில் எபோலா நோய் வேகமாக பரவி வருகிறது.
இநோய்க்கு இதுவரை 1400 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா இந்நோயை குணப்படுத்துக் கூடிய ஒரு மருந்தை தயாரித்துள்ளது. அடுத்த வாரம் முதல் எபோலா நோயை தடுக்கும் இந்த தடுப்பூசியை மனிதனுக்கு செலுத்தி பரிசோதிக்க உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:-
மருத்துவ பரிசோதனைக்காக செலுத்தப்படும் இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை போதுமான அளவு தூண்டுகிறது. பிரிட்டன் காம்பியா, மாலி மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இந்த மருந்திற்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாகவும் நைஜீரியா, ஆப்ரிக்கா நாட்டு மக்களுக்கு இந்த தடுப்புசியை செலுத்த அமெரிக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.