பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி? நவாஸ் ஷெரீப் பதற்றம்பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி? நவாஸ் ஷெரீப் பதற்றம்

பாகிஸ்தானில், எதிர்க்கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பாக்., ராணுவ தளபதி, ரகீல் ஷரீப், பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். அப்போது, அவரை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், பாகிஸ்தானில், எந்த நேரத்திலும், ராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில், பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த மாதம், 14ல் ஆரம்பித்த இந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளான, பி.டி.ஐ., தலைவர் இம்ரான் கான் மற்றும் பி.டி.ஏ., தலைவர் காத்ரியின் ஆதரவாளர்கள், தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வருவதால், நிலைமை மோசமடைந்து உள்ளது.

ஆசிரியர்