இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்தது குறித்து விசாரித்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்புவில் கொல்பிட்டி என்ற பகுதியில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
72 வயதாகும் இலங்கை ராணுவத்தின் முன்னாள் வீரர் ஒருவர் அமெரிக்க தூதரகம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார். அவரை காவல்துறை தடுத்து வீட்டுக்கு அனுப்பிய நிலையில் கொல்பிட்டியில் நடு வீதியில் தீக்குளித்திருப்பதாகவும், அவரது வாக்குமூலத்தில், நவநீதம்பிள்ளைக்கு எதிராக தாம் தீக்குளித்ததாகக் கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.