ஆப்கானிஸ்தானில் உளவுத்துறை அலுவலகத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்தகுல் – 13 பேர் பலிஆப்கானிஸ்தானில் உளவுத்துறை அலுவலகத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்தகுல் – 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அரசு வளாகம் மீது தலிபான்கள் வியாழக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் கஜினி நகரில், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்துக்கு வெடிப்பொருள்கள் நிரப்பிய இரண்டு லாரிகளில் வியாழக்கிழமை அதிகாலை வந்த பயங்கரவாதிகள், வளாக வாயிலில் அவற்றை வெடிக்கச் செய்தனர்.

இதில், பணி முடிந்து தூங்கிக்கொண்டிருந்த 8 போலீஸார் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மேலும் 19 பயங்கரவாதிகள் வளாகத்தின் நுழைவுப் பகுதியில் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் திருப்பித் தாக்கியதில் அந்த 19 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

அந்த வளாகத்திலுள்ள உள்ளூர் உளவுத்துறை அலுவலகத்தைக் குறிவைத்தே பயங்கரவாதிகள் தாக்குலில் ஈடுபட்டதாக காவல்துறை துணைத்தலைவர் அஸதுல்லா இன்ஸாஃபி தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பிய லாரி வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வில், கஜினி நகரிலுள்ள பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கியதாகவும், 80 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கஜினி மாகாண கவர்னர் மூஸா கான் அக்பர்ஜாதா தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆசிரியர்