April 1, 2023 7:05 pm

ஐ.எஸ். அமைப்பை ஒடுக்க செயல்திட்டம்: ஒபாமாஐ.எஸ். அமைப்பை ஒடுக்க செயல்திட்டம்: ஒபாமா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இஸ்லாமிய தேசம் பயங்கரவாத அமைப்பை எதிர்கொள்வதற்கான செயல்திட்டத்தை இன்று வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஐஎஸ் பயங்கரவாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான செயல்திட்டம் தயாராக உள்ளது. அதுகுறித்து அறிவிப்பை இன்று வெளியிடுவேன். ஈராக் போரைப் போன்று, ராணுவத் துருப்புகளை நேரடியாக சண்டையில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் அதில் இடம் பெறாது.

கடந்த ஆறேழு ஆண்டுகளாக, பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகலைப் போன்றதொரு செயல்திட்டமாக அது இருக்கும். அரசின் செயல்திட்டத்துக்கு, நாடாளுமன்றம் அனுமதியளிக்கும் என நம்புகிறேன். ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகலைக் கச்சிதமாக மேற்கொள்வதற்காக, கடந்த சில மாதங்கiளாகவே, அந்த அமைப்பு குறித்த உளவுத் தகவல்களைசே சேகரித்து வருகிறோம். ஈராக்கிலுள்ள அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க தூதர் சங்கங்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

விமானத் தாக்குதல்கள் மூலம், தூதரகம் அமைந்துள்ள எர்பில் நகரம் பயங்கரவாதிகளிடம் வீழ்ந்துவிடாமல் பாதுகாத்துள்ளோம். ஈராக்கில் அமெரிக்கர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோருக்கு மின்சாரம், குடிநீர் வழங்கி வரும் மொசூல் அணையையும் மீட்பதற்கு உதவினோம் என்றார் ஒபாமா.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்