அணு ஆயுதங்களை விரிவுபடுத்த ரஷ்யா முடிவுஅணு ஆயுதங்களை விரிவுபடுத்த ரஷ்யா முடிவு

தனது அணு ஆயுதங்களையும், விமானப்படை திறனையும் மேம்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. உலகின் எந்த பகுதியிலும் தோழமை நாடுகளுக்கு ஆதரவாக உடனடி தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா அண்மையில் அறிவித்ததை அடுத்து ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் முடிவை துணை பிரதமர் திமித்ரி ரோகோஸின் வெளியிட்டார். அந்நாட்டின் பாதுகாப்பு துளையை இவர் மேற்பார்வையிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

உலகின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்த இயல்கின்ற அமெரிக்க தேச நாடுகளின் வியூகத்தை எதிர்கொள்ளும் நோக்குடன் ரஷ்யா தனது அணு ஆயுதத் திறனை மேம்படுத்த முடிவு செய்திருக்கிறது. ரஷ்யாவின் ஏவுகணை திறன், கடற்படை ஆகியவற்றையும் மேம்படுத்துவோம். மேலும் விமான படை திறன், விண்வெளி பாதுகாப்பு திறன் ஆகியன மேம்படுத்தப்படும் என்றார்.

முன்னதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை தொடர்பான செலவுகள் குறித்த கூட்டம் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. அதிபர் புதின் இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் குவிக்கப்படுகின்றன. ஐரோப்பா, அலாஸ்கா பகுதிகளை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு அமெரிக்க ஏவுகணைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. உலகின் எந்த பகுதியிலும் உடனடி தாக்குதல் என்ற அடிப்படையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது. மேலும் இதனை விளக்குவதற்காக ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வருகிறார்கள்.

உலகின் எந்த பகுதியிலும் உள்ள இலக்கை ஒரே மணி நேரத்தில் அடையும் தாக்குதல் திட்டத்தை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வகுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்காக அணு ஆயுதம் அல்லாத வழக்கமான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவற்றை எதிர்கொள்வதற்கான ஆயுதங்களை ரஷ்யா உருவாக்க வேண்டி வரும் என்று ரஷ்ய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் யூரி போரி ஸோவ் முன்னதாக கூறினார். தற்காப்புதான் எங்கள் நாட்டின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

ஆசிரியர்