ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் 30 நாடுகள் ஒப்புதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் 30 நாடுகள் ஒப்புதல்

 

ஈராக், சிரியா நாடுகளில் சில பகுதிகளை கைப்பற்றிய இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உருவாக்கியுள்ளனர். அவர்களை ஒழிக்க வான்வெளி தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, அதற்கு உதவும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை மிரட்ட தங்களிடம் பிணைக் கைதிகளாக பிடிபட்ட அந்நாட்டவர்களின் தலையை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர்.

அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப், இங்கிலாந்து சமூக சேவகர் டேவிட் கெயின்ஸ் ஆகியோரை இதுபோன்ற கொன்றுள்ளனர். இக்கொடூரம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

எனவே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க அமெரிக்கா, இங்கிலாந்து, பிரானஸ் உள்ளிட்ட நாடுகள் உறுதி பூண்டுள்ளன. சர்வதேச கூட்டணி அமைத்து இந்த தீவிர வாதிகளை முறியடிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டது.

அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நடத்த ரஷியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் எகிப்து, ஈராக், ஜோர்டன், லெபனான் மற்றும் 6 அரபுநாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் ஒப்புக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதை தொடர்ந்து ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் மீதான குண்டு வீச்சை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. முன்பு ஈராக்கில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க படைகளை பாதுகாக்கவும், மைனாரிட்டி மக்களை மனிதாபமான முறையில் காக்கவும் தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்துவதாக அறிவித்தது.

தற்போது தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் ஈராக் படைகளுக்கு ஆதரவாக தனது தாக்குதலை விரிவுபடுத்தி தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பாக்நாத், சிஞ்சார் மலை பகுதி ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நிலை மீது சரமாரி குண்டு வீச்சு நடத்தியது.

இத்தாக்குதலால் 6 தீவிரவாதிகளின் ஆயுத வாகனங்கள் தகர்த்து அழிக்கப்பட்டன. கடந்த ஆகஸ்டில் இருந்து இதுவரை ஈராக் தீவிரவாதிகள் மீது 162 தடவை குண்டு வீச்சு நடத்தியுள்ளது.

ஆசிரியர்