பிரதமர் டேவிட் கேமரூன் மகிழ்ச்சி-பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிய எடுத்த முயற்சி தோல்வி பிரதமர் டேவிட் கேமரூன் மகிழ்ச்சி-பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிய எடுத்த முயற்சி தோல்வி

பிரிட்டனிடம் இருந்து ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிவதற்கு கருத்துக் கேட்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இன்று காலை இதற்கான  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஸ்காட்லாந்து கருத்தறியும் வாக்கெடுப்பில் முதன்முதலாக வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது  இந்த வாக்குப் பதிவில், ஸ்காட்லாந்து பிரிட்டனுடனேயே இருக்க வேண்டும் என்று 19,036 பேரும் , ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற வேண்டும் என்று 16,350 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 31 மாவட்டங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளில் பிரிட்டனிடம் இருந்து பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 55 சதவிகித வாக்குகளும், ஆதரவு தெரிவித்து 44 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமே பிரிவதற்கு ஆதரவு தெரிவித்து அதிகமான வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.நேற்று வியாழக்க்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலானோர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்