இலங்கையில் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் ராஜபட்ச வெற்றிஇலங்கையில் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் ராஜபட்ச வெற்றி

இலங்கையில் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. 34 இடங்களில் 19 இடங்களை வென்றுள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களை வென்றது. மக்கள் விடுதலை முன்னணி 2 இடங்களைப் பெற்றது.

முந்தைய ஆட்சியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 25 இடங்களைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத் தக்தது. அதிபர் மகிந்த ராஜபட்ச தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக ஈடுபட்டிருந்த நிலையில், குறைந்த இடங்களை அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மாகாணத்தின் முதல்வர் சசீந்திர ராஜபட்ச, அதிபரின் நெருங்கிய உறவினராவார்.

ஆசிரியர்