அங்கம் – 19 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை அங்கம் – 19 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

– வணக்கம்LONDON –

 

 

 

fg

வைத்தியசாலை நோக்கி சிகிச்சைக்காக வந்தார்கள் சிகிச்சை முடித்து மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலை காணப்பட்டது. ஏற்கனவே சொந்த இடங்களில் ஏற்பட்ட தாக்குதலினால் இடம்பெயர்ந்து புதிய இடங்களுக்கு நகர வேண்டி இருந்தது.

சில குடும்பங்கள் போரின் நடுவில் முற்று முழுதாக சிக்கி கொண்டனர். சில சமயங்களில் பலரை இழந்து ஒரு சிலருடனும் வாழ வேண்டிய குடும்பங்கள் பலத்த சவாலை எதிர் கொண்டனர்.

hjc

குறிப்பாக தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் மிகவும் நெருக்கடியை சந்தித்தார்கள் போரின் வேகமும் தொடர்ச்சியான இடப்பெயர்வும் மனதில் ஏற்ப்பட்ட பயமும் பலரை விரத்தி நிலைக்கு கொண்டு சென்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் அங்கவீனம் உற்றவர்களுக்கு கிளிநொச்சி வைத்தியசாலை மேம்பட்டு பேரவை ஊடாக குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கக்கூடிய திட்டம் ஒன்று அமுல்ப்படுத்தப்பட்டு வந்தது.

gnf

போரில் சிக்கிக் கொண்டவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறும் போது மனநல வைத்தியர்களினால் ஆறுதல் வாத்தை கூறப்பட்டு எஞ்சிய குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வாழ்வதற்கு குறிப்பிட்ட அளவு பண உதவியும் வழங்கப்பட்டது. அது அக் காலப்பகுதியில் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

 

 

 

 

தொடரும்……….

dr.sathy_  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/


ஆசிரியர்