தீவிரவாதிகள் பகுதியில் உணவு, தளவாடப் பொருட்களைத் வீசிய ஈராக்கிய விமானிகள்தீவிரவாதிகள் பகுதியில் உணவு, தளவாடப் பொருட்களைத் வீசிய ஈராக்கிய விமானிகள்

ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் அரசாங்கங்களால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போக அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள சக்லாவ்யா என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈராக் ராணுவம் போரிட்டு வருகின்றன.

இவர்களுக்கு உணவு, தண்ணீர், தளவாடங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தேவை ஏற்பட்டதை முன்னிட்டு ஆகாய மார்க்கமாக போர் நடக்கும் பகுதிகளில் இவற்றை வீச அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த சில விமானிகளின் தலைமையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இவர்கள் தவறுதலாக தீவிரவாதிகள் நிறைந்த பகுதியில் இந்தப் பொருட்களை வீசியுள்ளதாக பின்னர் தெரிய வந்தது என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், பிரிகேடியர் ஒருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானிகள் அனைவரும் புதிதாக பயிற்சிக்கு வந்துள்ள இளைஞர்கள் என்று அந்த பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் டிபென்ஸ் கமிட்டியில் பணிபுரியும் பாராளுமன்ற உறுப்பினரான ஹக்கீம் அல் சமிலி இதனை உறுதி செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்