காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த பாகிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் பேரணி நடத்தினர்.
லண்டன் நகரில் உள்ள டிபல்கர் சதுக்கத்தில் இருந்து டவ்னிங் வீதி வரை ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்தப் பேரணியில் சில நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்பதற்கு, மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் புட்டோ சென்றிருந்தார்.
அவர் மேடையில் ஏறி பேச முயன்றபோது பேரணியில் கலந்து கொண்ட சிலர் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து வீசி அவர் பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.
“இது காஷ்மீர் மக்களின் நலனுக்கான பேரணி. இதில் உங்களுக்கு வேலை இல்லை’ என்று கூறி அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.