இலங்கை அதிபர் ராஜபக்சேயின் பதவி காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்னரே அதிபர் தேர்தலை நடத்த விரும்புகிறார். அவர் 2–வது முறையாக அதிபர் பதவி வகித்து வருகிறார். 3–வது முறையாகவும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து ராஜபக்சே இலங்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மீண்டும் அதிபராக பதவி ஏற்பதற்கு தடையாக சட்டச் சிக்கல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வருகிற 10–ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக தெரியப்படுத்துமாறு கோரியுள்ளார்.
தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது பதவிக் காலம் 4 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நவம்பர் 18–ந்தேதிக்கு வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
3–வது முறையாக ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. இதைத் தொடர்ந்து ராஜபக்சே சுப்ரீம் கோர்ட்டில் கருத்து கேட்டுள்ளார்.