March 27, 2023 2:18 am

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து – செந்தில் தொண்டைமான எம்.பி தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து – செந்தில் தொண்டைமான எம்.பி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேர் மீதும் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த மாதம் 30-ந்தேதி கொழும்பு உயர்நீதிமன்றம், 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசியல் கட்சிகளும் இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியா-இலங்கை இடையே உள்ள கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 தமிழக மீனவர்களை இந்திய சிறைச்சாலைக்கு மாற்ற ராஜபக்சே சம்மதம் தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் இந்தியா மேல் முறையீடு செய்தது. தமிழக மீனவர்களுக்கு வாதாட இலங்கையைச் சேர்ந்த வக்கீல் அனில் சில்வா என்பவரை இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்தது.

தமிழக மீனவர்களிடம் இருந்து போதை பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வாதாட அனில் சில்வா திட்டமிட்டு இருந்தார்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்த மேல் முறையீட்டு வழக்கை நடத்த மத்திய வெளியுறவு துறை ஏற்பாடு செய்தது. இந்த வழக்கு நடைபெறுவதை இலங்கை அரசு விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனை விவகாரத்தில் முக்கிய திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் வலியுறுத்தலை தொடர்ந்து தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்து இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று உத்தரவிட்டுள்ளதாக செந்தில் தொண்டைமான எம்.பி. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் தமிழக மீனவர்கள் 5 பேரும் விரைவில் விடுதலையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்