March 31, 2023 5:09 am

ஹிலாரி மிகச் சிறந்த அதிபராக வாய்ப்பு | அதிபர் ஒபாமாஹிலாரி மிகச் சிறந்த அதிபராக வாய்ப்பு | அதிபர் ஒபாமா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டால் அவர் நாட்டின் மிகச் சிறந்த அதிபர்களில் ஒருவராக உருவெடுப்பார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஒபாமா இப்போது இரண்டாவது முறையாக அதிபர் பதவியில் இருப்பதால், அவரால் இனி அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது. இந்நிலையில் அவரது ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
முன்பு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிட நடைபெற்ற உள்கட்சி தேர்தலில் ஒபாமாவிடம் ஹிலாரி தோல்வியடைந்ததால் தான் அத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போனது. இந்நிலையில் அமெரிக்க தேசிய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஒபாமா மேலும் கூறியதாவது:
ஜனநாயகக் கட்சியில் அதிபர் பதவிக்கு பொருத்தமான பலர் உள்ளனர். எனினும் அவர்களில் ஹிலாரி கிளிண்டன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும். அவர் அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபர்களில் ஒருவராக இருப்பார். அமெரிக்க ஜனநாயக அரசியலில் ஹிலாரி பல ஆண்டுகளாக வலுவான சக்தியாக உள்ளார்.
எனினும் ஹிலாரி பல விஷயங்களில் என்னிடம் இருந்து மாறுபட்ட கருத்தை கொண்டவர். ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் போட்டியில் நாங்கள் இருவரும் இருந்தபோது எங்கள் கொள்கைகள், செயல்திட்டங்களில் உறுதியாக இருந்தோம் என்று ஒபாமா கூறியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்