மத்திய நைஜீரியாவில் மின்னா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு போகோஹராம் தீவிரவாதிகள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென புகுந்தனர். அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
பின்னர் உள்ளே புகுந்து சிறையில் அடைக்கப்பட்ட 200 கைதிகளை விடுதலை செய்தனர். இந்த தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால் இத் தாக்குதலில் பலியானவர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, இத் தாக்குதலில் போகோஹராம் மற்றும் அல்–கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அன்சாரு என்ற தீவிரவாத அமைப்பினர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏனெனில் அவர்கள் தான் இது போன்று பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.