March 27, 2023 2:57 am

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் கொழும்பில் விழுந்ததுஇலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் கொழும்பில் விழுந்தது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் கொழும்பு அருகே இன்று காலை விபத்துக்குள்ளானது. இதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் மரணமடைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான அண்டோனோவ் என்ற அந்த போக்குவரத்து விமானம் மோசமான வானிலை காரணமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து அதுருகிரியாவின் புறநகர் பகுதியில் விழுந்து எரிந்ததாகவும், இந்த விபத்தில் இரண்டு பேர் இறந்திருப்பதாக விபத்து நடந்த பகுதிக்கு அருகிலுள்ள மக்களும், காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் நான்கு பேர் பயணம் செய்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், மீட்புப் பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவலை பொறுத்தே விபத்திற்கான காரணம், இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றியும் தெரியவரும் என்று அப்பகுதி காவல் அதிகாரி அஜித் ரொஹானா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்