2ம் இணைப்பு
தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று 14-12-2014 காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.00 மணிவரை வவுனியாவில் தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது
இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்
இன்றைய அரசியல் நிலை மற்றும் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாகவும் ஏனைய விடயங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம். பல மாவட்டங்களில் இருந்த வந்த எங்கள் உறுப்பினர்களிடம் அபிப்பிராயங்கள் கோரப்பட்டது. ஆவர்களும் தங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்திருக்கிறார்கள். எங்களது மத்திய செயற்குழு கூட்டமானது கருத்த அறிகின்ற கூட்டமாகத்தான் நடைபெற்றது. மிகப்பெரும்பாலும் அவர்களுடைய கருத்துக்கள் ஒருமித்த கருத்தாக இருந்ததை நாங்கள் குறிப்பிடலாம். ஆனால் அந்த கருத்துக்களை வெளிப்படுத்த அது தீர்மானமாக்கப்படவில்லை கருத்து மட்டும் அறியப்பட்டிருக்கின்றது. இக்கருத்துக்களை ஒருமித்து தமிழரசுக்கட்சியினுடைய அரசியல் குழு அது பற்றி ஆராய்ந்து ஒரு பொருத்தமான சிபாரிசை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலமைக்கு கொடுக்கும். துமிழ்த் தேசிய கூட்டமைப்பானது அதை ஆராய்ந்து உரிய நேரத்தில் இறுதி முடிவை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
அத்தடன் நாங்கள் தொடர்ந்து மௌனம் காக்கமாட்டோம் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் முன்நாள் தலைவர் சம்பந்தன் மருத்துவ பரிசோதனைக்கு வெளிநாடு சென்றிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
இக்கூட்டமானது தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா தலமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன, பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடமாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்;தனர்.
தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வவுனியாவில்
தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று 14-12-2014 காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வவுனியாவில் தனியார் விடுதியொன்றில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இக்கூட்டமானது தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா தலமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன, பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடமாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
தமிழரசுக்கட்சியின் முன்நாள் தலைவர் சம்பந்தன் வெளிநாடு சென்றிருப்பதால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.