ஆஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள மாட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் லிண்ட் சாக்லேட் கஃபேவில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் பொதுமக்கள் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.
இதில் ஒரு பெண் உள்பட ஐந்து பேர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த நிலையில், தங்கள் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், இந்த சிக்கலான தருணத்தில் ஊழியரின் குடும்பத்தாருக்கு அனைத்து விதமான உதவிகளை செய்துவருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரகத்திடமும் பேசி வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. எனினும் பிடிபட்டவர் ஊழியரின் பெயர், விவரம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.