ரஷியாவை எந்த நாடாலும் மிரட்டவோ தனிமைப்படுத்தவோ முடியாது என்று அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் கூறினார்.
மாஸ்கோவில் சனிக்கிழமை உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
நமது இறையாண்மைக்கும் ஸ்திரத்தன்மைக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் நாம் சரியான பதிலடி கொடுத்துள்ளோம். இப்போதுள்ள நிலையை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
ரஷியாவை யாராலும் மிரட்டவோ அச்சுறுத்தவோ தனிமைப்படுத்தவோ முடியாது. இதுவரை யாராலும் அவ்வாறு செய்ய முடிந்ததில்லை. இனியும் எவராலும் அவ்வாறு செய்ய இயலாது என்று அவர் கூறினார்.
கிரீமியா பகுதியை ரஷியாவுடன் இணைத்தது தொடர்பாக ரஷியா மீது, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளன. மேலும், கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் செயல்படுவதும் மேற்கத்திய நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.