March 20, 2023 10:11 pm

ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு போதாத காலம் ரன்வேயை விட்டு தடம்புரண்டு புல்வெளியில் பாய்ந்த விமானம்ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு போதாத காலம் ரன்வேயை விட்டு தடம்புரண்டு புல்வெளியில் பாய்ந்த விமானம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு இது போதாத காலம்  என்றுதான் கூற வேண்டும். இந்நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்நிறுவனத்தின் போயிங் ஜம்போ விமானம் ஒன்று 162 பயணிகளுடன் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உலகின் ஒட்டுமொத்த கவனமும் இந்த சம்பவத்தை நோக்கியே உள்ளது.

இந்த சம்பவத்தினால் விமான நிலைய அதிகாரிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்டில் ஒழுங்கற்ற நிலை இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், எந்த தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்படவில்லை என்று பொறியாளர்கள் உறுதி செய்தபின்னரே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு ஏர் ஏசியா விமானமும் விபத்துக்குள்ளாகி, பயணிகளை அதிர்ச்சியடைய செய்த தகவல் வெளியாகி உள்ளது. இந்நிறுவனத்தின் ஆர்பி-சி8972 என்ற பயணிகள் விமானம், 159 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் பிலிப்பைன்சின் மணிலா நகரத்தில் இருந்து பானே தீவில் உள்ள கலிபோவுக்கு புறப்பட்டது.

கலிபோ விமான நிலையத்தில் குறிப்பிட்ட ரன்வேயில் விமானத்தை தரையிறக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியது. இதனால் ரன்வேயைத் தாண்டி புல்வெளியில் பாய்ந்தது. உள்ளே இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். ஆனால், விமானத்தின் முன்பகுதி மண்ணில் குத்தி நின்றுவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதில், பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா? என்ற தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்