வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை நாட்டவர்களுக்கு இரட்டை குடியுரிமை மீண்டும் வழங்க உள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகத்தி்ன் அதிகாரியான தமயந்தி ஜெயரட்சன கூறியதாவது:தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இநத இரட்டை குடியுரிமை வழங்குவதில் ஒரு சில மாற்றங்களுடன் மீண்டும் வழங்கப்பட உள்ளது. இதன்படி இரட்டை குடியுரிமை பெறுபவர்கள் 5 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை. அதற்கு பதிலாக நேர்முக தேர்வு நடத்தப்படும். நேர்முக தேர்வில் விண்ணப்பம் சரி பார்க்கப்படும். விண்ணப்பம் சரி பார்த்த பின்னர் ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தவுடன் இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.