இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக முடிவெடுத்திருக்கும் இத்தருணத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை மு.ப.11 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது