இலங்கையின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
இது குறித்து இலங்கைதேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:
இலங்கையின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் ஒன்றரை கோடி பேர் வாக்களிக்க உள்ள இத்தேர்தலில் 12 ஆயிரத்து 324 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு 25 ஆயிரம் உள்ளூர் பார்வையாளர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்குபெறுகின்றனர். 2 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் நாடு முழுவதும் 71 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு 8 மணியளவில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
இந்த தேர்தலில் அதிபர் ராஜபட்ச, ராஜபட்சவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்ரிபாலா ஸ்ரீசேனா உள்பட 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடந்த 1978 ஆம் ஆண்டு அதிபர் பதவி அறிமுகப்பட்ட பிறகு, இந்தத் தேர்தல்தான் மிகக் கடுமையான போட்டி நிலவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கும் என பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.