வவுனியா மாவட்டத்தில் 134 வாக்களிக்கும் நிலையங்களில் 67 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர தெரிவித்தார்.
காலை 7 மணியில் இருந்து 4 மணிவரை இடம்பெற்ற வாக்குப்பதிவில் 72618 பேர் வாக்களித்துள்ள நிலையில் வாக்கு பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந் நிலையில் 15 வாக்கு எண்ணும் நிலையங்களில் 9 நிலையங்களில் சாதாரண வாக்குகளும் 6 நிலையங்களில் தபால் மூல வாக்குளும் எண்ணப்படவுள்ளது