March 31, 2023 8:10 am

சந்திராசிறியை கவர்னர் பொறுப்பில் நீக்க இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு சந்திராசிறியை கவர்னர் பொறுப்பில் நீக்க இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கை வடக்கு மாகாண கவர்னர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் சந்திராசிறியை நீக்கி அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆரம்பம் முதல் இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வடக்கு மாகாணசபை முதல் மந்திரி விக்னேஸ்வரன், மாகாண அரசை கவர்னர் சந்திராசிறி சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இன அழிப்பு போரின்போது யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவத்தின் உயரதிகாரியாக பணியாற்றியவர், சந்திராசிறி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சந்திராசிறியை இன்று கவர்னர் பொறுப்பில் நீக்கி புதிய இலங்கை அதிபராக பொறுப்பேற்றிருக்கும் மைத்ரிபாலா சிறிசேனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவருக்கு பதிலாக வடக்கு மாகாண புதிய கவர்னராக பல்ஹக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துவந்த இவர், முன்னர் விடுதலைப் புலிகளுடன் அதிக நெருக்கம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்