பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் இன்று ஒஸ்வால் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். இலண்டனில் கணிசமான மக்கள் தொகையைக்கொண்ட ஜெயின்ட் சமூகத்தைச் சேர்ந்த ஒஸ்வால் நிலையம் மீள் வடிவமைக்கப்பட்டு இன்று Northaw நகரில் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. ஜெயின்ட் சமூகத்தைச் சேர்ந்த பெருமளவான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் பேசுகையில் ஆசிய சமூகங்களின் கலாசார விழுமியங்களை தான் நன்கு அறிந்து வைத்துள்ளதாகவும் இந்திய சிற்பக்கலையின் சிறப்பை இந்த நிலையம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இன்நிகழ்வினை இலண்டனில் உள்ள தமிழ் நிறுவனமான CLOUD மீடியா நேரடி ஒளிபரப்பினை செய்திருந்தது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இவ்விழாவினை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான சந்தர்ப்பம் இளையோர்களினால் நடாத்துகின்ற ஒரு தமிழ் நிறுவனமான CLOUD மீடியாக்கு கிடைத்தமை பாராட்டத்தக்கது.