March 20, 2023 9:23 pm

அனந்தி சசிதரன் மீதான குற்றச்சாட்டு | தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம்அனந்தி சசிதரன் மீதான குற்றச்சாட்டு | தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மைத்திரிபால சிறிசேனவுக்கு வெளிப்படையாக என்னால் ஆதரவு தெரிவிக்க முடியாது என் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை தமிழரசுக்கட்சியிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு 20.1.2015 திகதியிட்டு அனுப்பி வைத்துள்ள கடித்தில் தெரிவித்துள்ளார்.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,

எனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலும் தமிழரசுக்கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கிலும் கட்சியின் முடிவென்ற பெயரில் கடந்த 3 ஜனவரி 2015 இல் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில் பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முடிவுக்கு மாறாக மைத்திரிபால சிறிசேனவுக்கு வெளிப்படையாக என்னால் ஆதரவு தெரிவிக்க முடியாது என தெரிவித்திருந்தேன்.

காலாண்டு காலமாக தமிழ் அரசியலில் கட்டிக்காக்கப்பட்ட அடிப்படை அரசியல் அறங்களை பாதுகாக்கும் பொருட்டும் எனது மனச்சாட்சிக்கு நேர்மையாக இருக்கும் பொருட்டும் இந் நிலைப்பாட்டை நான் எடுத்தேன்.

தமிழரசுக்கட்சிக்கள் உட்கட்சி ஜனநாயகம் முழுமையாக செத்துவிடவில்லை என்ற நம்பிக்கையிலேயே அக் கருத்தை வெளியிட்டேன். நான் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதாக தங்கள் கடிதம் எனது நம்பிக்கை தவறானது என்பதை நிரூபித்துள்ளது.

உங்கள் கடிதத்தில் குறிப்படப்பட்டுள்ளவாறு என் மீதான குற்றச்சாட்டுபத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். அக் குற்றச்சாட்டு பத்திரத்தோடு பின்வரும் இரண்டு வகை ஆவணங்களையும் சேர்த்து அனுப்புமாறும் வேண்டுகின்றேன்.

அவையாவனஇ தமிழரசுக்கட்சியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனநாயக ரீதியாக முடிவடுக்கப்பட்டதை ஆவணப்படுத்தும் கூட்டத்தின் கூட்ட அறிக்கை, இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டகட்சிக்கூட்டங்கள் அனைத்தினதும் கூட்ட அறிக்கை,அவற்றில் சமூகமளித்தவர்களின் பெயர் விபரம் உள்ளடங்களலாக.

மற்றும்  தமிழரசுக்கட்சியின் யாப்பின் பிரதியொன்று என அக் கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்