பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் அலுவலகத்திற்கு நேற்று தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் டேவிட் கேமரூனுக்கு தொலைப்பேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அது என்ன மிரட்டல் என்பது பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பிரட்டனில் உள்ள அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தபப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்தது யார், எங்கிருந்து மிரட்டல் வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.