சாலையில் விழுந்து கிடந்த மனிதரை தூக்கி உணவு வாங்கிக் கொடுத்து சாலையை கடக்க உதவிய இளைஞரை, அந்த மனிதன் மிகக் கொடூரமாகத் தாக்கியதில், இளைஞரின் பெற்றோராலேயே அவரை அடையாளம் காண முடியாத அளவுக்கு போய்விட்டது.
இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம்.
ஆங்கஸ் கல்லகார் (18) என்ற மனிதநேயம் மிக்க அந்த இளைஞருக்குத் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராம்சே என்ற 25 வயது நபர் ஆங்கஸை தாக்கியதில், அவரது மண்டை ஓட்டில் மட்டும் 13 எலும்பு முறிவுகளும், கை விரல்களில் 3 எலும்பு முறிவுகளும், முதுகெலும்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
முகம் முழுவதும் காயங்கள், ரத்தம் வழிந்த நிலையில், அவரது தலை, அதன் உண்மையான அளவை விட 3 மடங்கு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆங்கஸை, அவரது பெற்றோராலேயே அடையாளம் காண முடியாமல் போனது.
ஒரு வாரத்துக்கும் மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வருகிறார் ஆங்கஸ். இந்த கொடூர தாக்குதலை நடத்திய ராம்சேவுக்கு தண்டனை என்ன தெரியுமா வெறும் 18 மாதங்கள்தான்.