March 27, 2023 1:27 am

இலங்கை அரசு தமிழர்கள் மறுகுடியேற்றத்திற்கு நிலம் ஒதுக்கீடு?இலங்கை அரசு தமிழர்கள் மறுகுடியேற்றத்திற்கு நிலம் ஒதுக்கீடு?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இடம்பெயர்ந்த தமிழர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு, 220 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என, இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை அமைச்சர் மற்றும் அமைச்சரவை செய்தி தொடர்பாளர் (பொறுப்பு) லஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது:

இலங்கை வடக்கு மாகாணம், பலாலியில் விமான படையின் கட்டுப்பாட்டில், 1,000 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற முறையில், அதிபர் சிறிசேன, 220 ஏக்கர் நிலத்தை, இலங்கை தமிழர்கள் மறுகுடியேற்றத்திற்கு வழங்க உள்ளார்.

இங்கு, உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த 1,022 தமிழ் குடும்பங்கள், குடியமர்த்தப்படுவார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும், 0.125 ஏக்கர் நிலமும், அங்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி யும் வழங்கப்படும். இதே அளவிலான நிலம், இலங்கை கிழக்கு மாகாணத்திலும் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இலங்கை அதிபர் சிறிசேன, வரும், 16ம் தேதி டில்லி வருவதை முன்னிட்டு, தமிழக மீனவர்களின், 87 படகுகள் விடுவிக்கப்பட்டன.

இந்நிலையில், இலங்கை தமிழர்களை மறுகுடியமர்த்தும் திட்டத்திற்கான நிலம் ஒதுக்கீடு, நிதியுதவி ஆகிய அறிவிப்புகளை, இலங்கை அரசுவெளியிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்