March 27, 2023 2:19 am

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் ஊழியர்கள் கொலைபாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் ஊழியர்கள் கொலை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்துக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவது இன்னமும் தொடர்கதையாகவே உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தானில் சோகப் என்ற பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்க வந்த ஊழியர்களை கடந்த சனிக்கிழமை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இந்த நிலையில், அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களது உடலில் துப்பாக்கிக் குண்டுகளின் காயங்கள் காணப்படுகின்றன.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி பாதிக்கப்பட்டு, ஏராளமான குழந்தைகளை போலியோ பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்