முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரது தீர்மானத்திற்கு எதிராகவே வியாழக்கிழமை மகளிர் அமைப்பொன்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த அந்தோனி ஜெயமவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.
இந்த மனுவில் சட்டமா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர், அந்தோனி ஜெயமஹ உள்ளிட்ட 10 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மரண தண்டனை கைதிக்கு மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தபோதிலும், மனிதாபிமானமற்ற கொலை குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது.
எனவே மனுவை விசாரிக்க அனுமதி வழங்கவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், ஜெயமஹ நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையிலான இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.