
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பிரித்தானியாவில் முக்கிய நகரங்கள் நான்காம் கட்ட முடக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த முடிவை இன்று மாலை அறிவித்துள்ளார். முக்கியமாக இலண்டன் நகரம் முற்றாக முடங்க உள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது.
நத்தார் பெருநாளுக்காக எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை மக்கள் கூடுவதற்கு தளர்த்தப்பட்ட முடிவுகள் இந்த நகரங்களில் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த அறிவித்தல் மூலம் அனைத்து நத்தார் நிகழ்வுகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஆயினும் சில பகுதிகளில் கிறிஸ்துமஸ் நாள் அன்று சில தளர்வுகள் காணப்படுகின்றன அவையும் எதிர்வரும் நாட்களில் தொற்று நிலைமைகளை பொறுத்து மாற்றமடையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.