முல்லைத்தீவு நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 75 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கான மகஜரை தபால் ஊடாக அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது