போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) வலியுறுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் கலந்துகொண்டதை அவதானித்த பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.